கோத்தாவிற்கு செண்டை மேள வரவேற்பு!


உத்தியோகபூர்வ விஜயமாக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, விமான நிலையத்தில் இந்திய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வமாக இன்று (28) மதியம் புதுடில்லி புறப்பட்டார் கோட்டாபய ராஜபக்ச. இன்று மதியம் 1 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சாதாரண பயணிகள் முனையத்தினூடாக சென்று, சுங்க மற்றும் குடியகல்வு பணிகளை முடித்துக் கொண்டு, புறப்பட்டார்.

இந்த பயணத்தில் 10 உறுப்பினர்களை கொண்ட தூதுக்குழுவே பயணமாகிறது.

கோட்டாவின் விஜயத்தை முன்னிட்டு தலைநகர் புதுடில்லியில், பல இடங்களில் வரவேற்பு பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

No comments