நந்திக்கடலிற்கு இரா.சம்பந்தன் விருது!


நந்திக்கடல் பேசுகின்றது நூலை வெளியிட்டமைக்காக போருக்கு பின்னரான சிறந்த ஆவணப்படுத்தலாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையிலான குழுவினரால் தொகுப்பாசிரியர் மற்றும் ஊறுகாய் இணைய இயக்குநர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிற்கான கௌரவிப்பு விருதுகளை கூட்டமைப்பின் தேசிய தலைவர் இரா.சம்பந்தன்,சயந்தன் சகிதம் வழங்கியிருந்தார்.

சாவகச்சேரியில் நடைபெற்ற நிகழ்வில் நடராஜா ரவிராஜ்(தற்போது மாமனிதர் இல்லையாம்) அவர்களது 13வது நினைவேந்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்விலேயே இக்கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் சித்தார்த்தன்,சுமந்திரன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நந்திக்கடல் பேசுகின்றது நூல் ஜெர்மனி, நோர்வேயினை தொடர்ந்து கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

No comments