பலருடன் பேசியே சஜித் ஆதரவு:சுமந்திரன்!


கூட்டமைப்பு எழுந்தமானமாக சஜித் பிறேமதாசாவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்யவில்லை.பல தரப்புக்களுடனும் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுக்களின் முடிவாகவே சஜித் பிறேமதாசாவிற்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்திருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள  ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பரப்புரைக் கூட்டம் இன்று புதன்கிழமை பிற்பகல் நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் நடைபெற்றிருந்தது.

அங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித்திற்கான ஆதரவு ஏன் வழங்கப்பட்டதென்பதை அவர் விபரித்திருந்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில்  ஆதரவு கூட்டம் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார்,  இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments