விடுதிக்கு காணி வழங்க நிர்ப்பந்திக்கும் இராணுவம்?


கௌதாரிமுனையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் நட்சத்திர விடுதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மக்களை அழைத்து கோரிக்கை விடுத்திருக்கும் விடயம் வாதப்பிரதிவாதங்களிற்குள்ளாகியிருக்கின்றது.

கௌதாரிமுனையில் போரிற்கு முன்னர் 407 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் வாழ்ந்த நிலையில் தற்போது 120 குடும்பங்களைச் சேர்ந்த 382 பேர் மட்டுமே வாழ்ந்துவருகின்றனர்.

யுத்தங்காரணமாக இடப்பெயர்வுகள் , உயிரிழப்புக்கள் , வாழ்வாதாரம் இன்மை , உட்கட்டுமான வசதிகள் எவையுமே அற்ற சூழல்காரணமாக தற்போது 120 குடும்பங்களவச் சேர்ந்த 382 பேர் மட்டுமே வாழும் ஓர் அவலக் கிராமமாக கௌதாரி முனை இருந்தது.

இந்நிலையில் தற்போது உள்ளதோடு முதலீடு என்னும் பெயரில் கௌதாரிமுனையினை சூறையாட ஆளுநர் முதல் அரசியல்வாதிகள் வரை முற்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தற்போது படை தளபதிகளும் களமிறங்கியிருப்பதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

No comments