கஞ்சா - ஆயுதங்களுடன் இராணுவ வீரர் கைது

பூண்டுலோயாவில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய சோதனை நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் – 31, வெற்றுத் தோட்டாக்கள் – 8 மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மற்றும் 13 கிலோ கிராம் கஞ்சா என்பன சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இராணுவ வீரர் எனவும் 6 வருடங்களுக்கு முன்னர் இராணுவ கடமையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை எல்பொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பிரதேசத்தில் சட்டவிரோதமாக தோட்டாக்களை ஒருவர் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்டகாலமாக மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments