கோட்டாவை துரத்தும் பாவச்சுமை?


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை இன்னமும் துறக்கவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
‘2019 ஜனாதிபதி தேர்தல் இப்போது உத்தியோகப்பூர்வமான ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும் இடையிலான போராக மாறியுள்ளது. அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் மூன்றாவது பட்டியலிலும், கோட்டாபய  ராஜபக்ஷவில் பெயர், இல்லை.
அவர் இன்னமும் அமெரிக்காவின் குடிமகனாகவே இருக்கிறார். கோட்டாபய  ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டாலும்  இலங்கையின் ஜனாதிபதியாக செயற்பட முடியாது.
முன்னைய காலாண்டு அறிக்கையில், கோட்டாபய  ராஜபக்ஷவின் பெயர் இருக்காத போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையில் நிச்சயமாக அது இடம்பெறும் என்று  அவரது பேச்சாளர்கள் கூறியிருந்தனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷ பெயர் இடம்பெறவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர்,  அவரது பெயர் இல்லாத பட்டியலை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் ஹரின் பெர்னான்டோவின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதில் அளித்து பதிவிட்டுள்ளார்.

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷவின்  அமெரிக்க குடியுரிமை தொடர்பான சந்தேகங்களுக்கு அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதரம் உள்ளது. இனி அவர் அமெரிக்க குடிமகன் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments