கோட்டா இலங்கையனா?:நிரூபிக்க உண்ணாவிரதம்!


ஏட்டிக்குப்போட்டியாக பிரதான கட்சிகள் ஆட்களை அமர்த்தி போராட்டங்களை முடுக்கிவருகின்றன.

ஏற்கனவே மிலேனியம் சேலஞ்ச்சினை தூக்கிப்பிடித்த கோத்த தரப்பு இலங்கையினை அமெரிக்காவிற்கு விற்பதாக பிரச்சாரம் செய்து வருகின்றது.
இந்நிலையில் கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (10) ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ச அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

No comments