சந்திரகுமார் கோத்தாவுடனா?


ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்  என்றழைக்கப்படும் முருகேசு சந்திரகுமார்; தனது ஆதரவை கோத்தபாயவிற்கு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.எனினும் அது ஈபிடிபி மற்றும் தமிழரசு தரப்புக்களது பிரச்சாரமென அவரது ஆதரவு தரப்புக்கள் அறிவித்துள்ளன.

ஏற்கனவே முன்னாள் ஆளுநர்களான சந்திரசிறி, ரெஜினோல்ட் கூரே,இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள்,நாடாளமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பொதுஜன பெரமுனவின் வடக்கு பிரிவு ஆகியோர் ஒரு புறமாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின டக்ளஸ் அணி மற்றொரு புறமாகவும் கோத்தா ஆதரவு பிரச்சாரம் களை கட்டி வருகிற நிலையில் சந்திரகுமாரின் ஆதரவும் கிடைத்துள்ளது ஈ.பி.ஆர் எல் எப் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் அனைவரும் கோத்தாவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

எனினும் இதனை பற்றி சந்திரகுமார் தரப்பு பகிரங்கமாக பதில் அளிக்காது இருந்துவருகின்றதுடன் இதுவொரு பிரச்சாரம் எனவும் தெரிவிக்கின்றன.

No comments