பதுங்குகுழி போன்ற இடம் கண்டுபிடிப்பு; மிதிவெடி மீட்பு

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்றதான கட்டமைப்பொன்று புதிதாக  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பு ஒன்றை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்டந்து துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கட்டமைப்பு தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்பாேது 3 மிதிவெடிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அகழ்வு பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

No comments