பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது! இணைய சேவைகளும் முடக்கம்;

ஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன நிலையில்,

 அந்த ஆர்ப்பாட்ட கலவரத்தினால் பலியானோர் தொடர்பில் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இணையத் தொடர்புக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்ற மாதம் முதல் தேதி ஈராக்கில் கடுமையான வன்முறை மூண்டது. ஆறு நாட்கள் நீடித்த கலவரத்தில் 157 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பாக்தாதைச் சேர்ந்தவர்கள். உயரமான இடங்களிலுள்ள மறைவான பகுதிகளிலிருந்து பலர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இணையத்தில் சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியதைத் தொடர்ந்து, அங்கு இரண்டு வாரங்களாக அமைதி நிலவியது.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ஷியா இனத்தவரின் புனிதத் தலமான கர்பலா அருகே மீண்டும் கலவரம் மூண்டது. சென்ற மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து பலியானோர் குறித்த தகவல்களை வெளியிடுவதை ஈராக்கிய அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments