திருவள்ளுவருக்கு காவிகட்டிய அர்ஜுன் சம்பத்; அதிரடியாக கைது
திருவள்ளுவருக்கு காவிகட்டி ருத்திராட்சம் அணிவித்த இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழக காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் திருவள்ளுவர் உடையின் நிறம் குறித்த கேள்விகளும், தஞ்சை பிள்ளையார் பட்டியில் அவரது சிலை மீது சாணம் வீசியதும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, ருத்ராட்ச மாலை அணிவித்ததுடன், காவி துண்டை சிலையின் மீது அணிவித்து தீபாராதனை காண்பித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதில் ஏற்பட்ட பரபரப்பு பல விமர்சனங்களால் தணியாது இருந்த நிலையில், தற்போது அர்ஜுன் சம்பத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment