வடக்கு ஆளுநர் யார்?பரபரப்பில் அதிகாரிகள்!


வடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி மீள ஆளுநர் கதிரைக்கு வருவாராவென்ற பரபரப்பு அனைத்து மட்டத்திலும் வரிரவி காணப்படுகின்றது.

இதனிடையே நடந்து முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியீட்டியதையடுத்துப் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதுடன்; வடமாகாணத்தின் புதிய ஆளுநராக யாரை நியமிப்பது? என்பது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய வடமாகாண முன்னாள் ஆளுநரும், யாழ். மாவட்ட முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதியுமான மேஜர்.ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர்- ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி, ஊவா மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரட்ண  ஆகிய நால்வரின் பெயர்கள் தற்போது குறித்த பதவிக்காகப் பரிசீலனையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஆளுநர் சந்திரசிறி இராணுவ ஆட்சி போன்றே வடமாகாணசபையில் ஆளுநராக செயற்பட்டதுடன் பல மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments