கூட்டமைப்பின் பிரிவினை வாத கோரிக்கையை சஜித் நிறைவேற்றுவார்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என தான் நம்புவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நான் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனாலும் எனது தோள்களில் சுமந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவேன்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியில் இருக்கும் போது செய்ய முடியாதவற்றை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், செய்வேன் என வாக்குறுதி அளிப்பது நம்பமுடியாத ஆபத்தமானது.

எஸ்.பி. திசாநாயக்கவின் மெய்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு விவகாரத்தில், யார் குற்றம் இழைத்திருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன்.

இதேவேளை சுற்றுலாத்துறையின் ஊடாக அதிக வருமானத்தை பெற முடியும். எனவே அதனை மேலும் அபிவிருத்தி செய்து அதனூடாக  வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க முடியும்.

இதற்காக ஏனைய நாடுகளில் இலங்கையை முதலில்  பிரபலப்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments