நேர்மை இல்லையெனில் நீதிமன்றமே: ஹக்கீம்

தனக்கெதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆதாரமற்ற பிரசாரத்தில், தனியார் தொலைக்காட்சியொன்று செயற்படுகின்றதென தெரிவித்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்து பரப்பினால், அந்த ஊடகத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வேன் என்றார்.
கொழும்பு-2, உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நான், பயங்கரவாதியென்றும் சஹ்ரானுடன் தனக்கு தொடர்புள்ளதென காட்டுவதற்காக, சித்திரிக்கப்பட்ட ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. வேரொரு வேட்பாளரின் கைக்கூலியாகச் செயற்படும் ரிஷான் மஹ்ரூப் என்பவரைப் பயன்படுத்தியே இதனை  அரங்கேற்றியுள்ளனர்” என்றார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை தருவதற்காக, ரிஷான் மஹ்ரூப் என்பவர், கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரான சிப்லி பாறூக் ஊடாக பேரம் பேசலுக்கும் வந்துள்ளார் எனத் தெரிவித்த ஹக்கீம், தன்னிடம் பணம் கறப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை அவர் முன்னெடுத்திருந்தார் என்றார்.
இவ்வாறான விடயங்களுக்கும் அதற்காக, செயற்படுவோருக்கும்  ஊடகங்கள் துணைபோவது விரும்பதகாத செயலாகுமெனக் கூறிய அமைச்சர்  ஹக்கீம், என்மீது தொடர்ந்தும் வீண்பழி சுமத்துவதை தவிர்க்கவேண்டுமெனவும், முடியாத கட்டத்தில் தான் சட்ட ரீதியாக அனுகவேண்டிவருமெனவும்  தெரிவித்தார்.

No comments