அமைச்சுப் பதவியை மறுத்தார் கம்மன்பில

இடைக்கால அமைச்சரவையில் தனக்கு அமைச்சுப் பதவி வேண்டாம் என்று உதய கம்மன்பில எம்பி மறுத்துள்ளார்.

இன்று அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்தார். அதில்,

இடைக்கால அமைச்சரவையில் உங்களுக்கு ஆதரவளித்த பலரும் அமைச்சுப் பதவியை எதிர் பார்க்கின்றார்கள். இதனால் 10 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது அது 15 ஆக அதிகரித்திருக்கின்றது.

எனவே புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ஜனாதிபதியும், பிரதமருக்கு முகங்கொடுத்துள்ள கடினத்தன்மை தொடர்பில் நன்கு சிந்தித்து இடைக்கால அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறேன் - என்றுள்ளது.

No comments