தீப்பற்றிய கடைத் தொகுதி

ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து, இன்று (25) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சில்லறை கடை, இருவெட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகிய நான்கு கடைகளே முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments