சந்தையில் முறுகல்; கத்தியை காட்டிய மீன் வியாபாரி கைது

யாழ்ப்பாணம் - சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொழிலாளியை வெட்டுக் கத்தியை காண்பித்து மிரட்டியதாக தெரிவித்து மீன் வியாபாரி ஒருவர் இன்று (25) காலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் சுகாதாரத் தொழிலாளி ஈடுபட்டுள்ளார். இதன்போது வியாபாரி ஒருவர் கழிவகற்றல் ஒழுங்காக நடைபெறுவதில்லை என்று தொழிலாளியிடம் கேட்டுள்ளார்.

அதனால் இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து கத்தியை காட்டி மிரட்டியதாக அங்கு சென்ற பொலிஸார், வியாபாரியை கைது செய்து இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில் சுன்னாகம் மீன் சந்தையில் ஒழுங்குமுறையில் கழிவகற்றல் இடம்பெறுவதில்லை. பணியை ஒழுங்காகச் செய்யலாமே என்று கேட்டேன். அப்போது எனது கையில் மீன்வெட்டும் கத்தி இருந்தது. அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஒழுங்கான கழிவகற்றலை உறுதி செய்யவில்லை என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மீன் வியாபாரி தெரிவித்தார்.

No comments