தொடர்கின்றது களையெடுப்பு!


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி  இந்திரஜித் குமாரசுவாமி, தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய கடந்த 02ஆம் திகதி அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜுலை மாதத்துடன் பதவி விலகவிருந்த நிலையில், ஏப்ரல் தாக்குதலையடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் நிலையை அடுத்து, அவர் தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், நவம்பர்02ஆம் திகதி அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் டிசெம்பர் மாதத்துடன், அவர் பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments