யாழில் முன்னேற்றகரமான வாக்களிப்பு!


இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரது தகவல் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10 மணி நேரம் வரையான காலப்பகுதியில் யாழில் இத்தகைய வாக்;களிப்பு இடம்பெற்றுள்ளமை ஜனாதிபதி தேர்தலில் கணிசமான தாக்கத்தை செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments