பணியாளரை காவல்துறையிடம் முன்னிலைப்படுத்த மறுப்பு!
சுவிஸ் தூதரகம் கடத்தப்பட்ட தமது பணியாளரின் பாதுகாப்பு கருதி அவரை இலங்கை காவல்துறை முன்னிலையில் ஆஜர்படுத்துவதை தவிர்த்துவருகின்றது.இதனிடையே ஏனைய உத்தியோகத்தர்களது பாதுகாப்பு தொடர்பில் ஏனைய நாட்டு தூதரகங்களும் கவனம் செலுத்த முற்பட்டுள்ளன.
இதனிடையே இலங்கையிலிருந்து தப்பி ஓடிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி நிசாந்த டீ சில்வாவை நாடு கடத்து மாறு எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என சுவிஸ் தூதரகம் மீள மீள கூறிவருகின்றது.
இதனிடையே குறித்த பணியாளரது பாதுகாப்பு கருதி காவல்துறையிடம் முன்னிலைப்படுத்துவதை தடுக்க கடத்தப்பட்ட தமது பணியாளரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Post a Comment