செவந்தியிடம் பல மணி நேரம் சிஐடி விசாரணை

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடக செயலாளராக இருந்த ஊடகவியலாளரும் 'வொயிஸ்டியூப்' ஆசிரியருமான துஷார செவ்வந்தி விதாரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) நேற்று (28) 6 மணிநேர விசாரணை செய்துள்ளனனர்.

இதன்போது அவரிடம் அண்மையில் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது என்று துசார தெரிவித்தார்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் 'த லீடர் எல்கே' ஆசிரியர் தனுஷ்க சஞ்சயவிடவிடம் சிஐடியினர் 8 மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments