அதிகாலை விபத்தில் நால்வர் படுகாயம்

பூநகரி - செல்விபுரம் வீதி வளைவில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் வீதி ஓரத்தில் இருந்த மரமொன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது நால்வர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் மற்றையவர் பூநகரி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்ற வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments