குழந்தையை கைவிட்டு சென்ற தாய், தந்தை கைது!

மடுல்சீம, மெட்டிகஹதென்ன பகுதியில் உள்ள வயலொன்றில் தமது குழந்தையை கைவிட்டுச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெட்டிகஹதென்ன கிராமத்தை சேர்ந்த குழந்தையொன்று வயல்வெளியில் அழுதுகொண்டிருந்ததை அவதானித்த கிராமவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
துணிப்பையுடன் 20 மாதங்களான குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குழந்தையின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குழந்தையை வயல்வெளியில் இவ்வாறு கைவிட்டுச்சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments