தவறாமல் கல்லா கட்டிய தமிழரசு!


தேர்தல் வருகின்ற போது அதற்கு பிரச்சாரம் செய்கின்றனரோ இல்லையோ தமது கல்லாவை கட்டிக்கொள்ள தமிழரசு தரப்பு தவறுவதில்லை.

இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் அவ்வாறு கல்லா கட்டிக்கொள்ள மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை தவறவில்லை.

தேர்தல் பிரச்சார கூட்டங்களிற்கு ஆட்களை அழைத்துவர இம்முறை தமிழரசின்; நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தலா ஒன்றரை மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அவற்றினை பங்கிட்டு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளிற்கு வழங்கி ஆட்களை பிரச்சார கூட்டங்களிற்கு அழைத்துவர பணித்திருந்தனர்.ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அதனை பொக்கற்றினுள் போட்டுக்கொண்டனர்.

இதனிடையே கிட்டுபூங்காவில் நடைபெற்ற கூட்டமைப்பின் இறுதி பிரச்சார கூட்டத்திற்கு மாநகர முதல்வர் ஆனோலட்டிற்கு ஜந்து இலட்சம் கொடுக்கப்பட்டது.ஆனாலும்  அதனை ஏனைய உறுப்பினர்களிற்கு பங்கிடாமல் அவரே சுருட்டிக்கொண்டதாக ஏனைய மாநகரசபை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தை நடத்த சிறீதரன் ஒரு கோடி கோரிய போதும் அது கிட்டியிருக்கவில்லை.அதனால் கிளிநொச்சியில் கூட்டமைப்பின் ஆதரவு கூட்டம் ஏதும் நடந்திருக்கவில்லை.

No comments