டெல்லி தொடரூந்து நிலையங்களில் சுற்றித் திரியும் ஏஞ்சலா மெர்கெல்!அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் சென்செலர் ஏஞ்சலா மெர்கெல் இந்தியப்  பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள துவாரகா செக்டார் 21 மெட்ரோ தொடரூந்து நிலையத்துக்குச் சென்ற ஏஞ்சலா மெர்கெல் மெட்ரோ தொடரூந்தில் சிறிது நேரம் பயணம் செய்தார். அந்நாட்டின் அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கியான கே.எஃப்.டபிள்யூ நிதியுதவியில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களையும் பார்வையிட்டார்.
அங்கு 30 நிமிடங்கள் வரை செலவிட்ட அவர், தொடரூந்து  நிலைய வாசலில்  ஆட்டோ ஓட்டுனர்களை  சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து ராஜ்குமார் என்ற ஆட்டோ டிரைவர், எங்களது தொழில் குறித்து ஜெர்மனி அதிபர் கேட்டறிந்தார் என்றும்  அவருடன் கைக்குலுக்கிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் போக்குவரத்துத் துறையைச் சீரமைக்க 1,600 கோடி ரூபாய் வழங்கப்படும் என  ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments