கோத்தா முழுப்படையுடனாவது விவாதத்திற்கு வர சவால்?


ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விவாதத்துக்கு வருமாறு வி​டுத்த அழைப்புக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ தனியாக வரத் தயங்கும் கோட்டா, முழுப்படையுடன் வந்தாலும் தான் தனியாக விவாதிக்க தயாரெனவும் தெரிவித்தார்.
கண்டி கம்பளையில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புகளை அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவுள்ளதுடன், ஜனாதிபதி செயலணியூடாக இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்பாடுகளையும் தானே முன்நின்று நடைமுறைப்படுத்துதாவும் சாடினார்.
அதேபோல், நாட்டை அழிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட சகல விடயங்களையும் தான் ஒழித்துகட்டுவதாகவும், பயங்கரவாத சக்திகளுக்கு தடையிட்டே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தபோவதாகவும் தெரிவித்தார். 
அதேநேரம் அண்மையில் எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்க விவாதத்துக்கு தான் விடுத்த அழைப்பு தொடர்பாக இன்று வரையில் பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர்,  தனியாக வரப் பயமெனில் முன்னாள் ஜனாதிபதியான, அண்ணனையும் அழைத்து வரலாம் என்றார்.
எவ்வாறிருப்பினும், தான் தனியாகவே வருவேன் எனத் தெரிவித்த அவர் பெரும்படையுடன் கோட்டா வந்தாலும் தனித்து நின்று விவாதிக்க தயாரெனவும் சாவால் விடுத்தார்.     

No comments