ஒருபுறம் பிறேமதாசா மகள்:சந்திரிகாவும் யாழில்


வடக்கு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சலி ஜெயக்கொடி உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் வடக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவர்கள் கோத்தாவின் தீவிர ஆதரவாளரான யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தின் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதனிடையே இன்றைய தேர்தல் பிரச்சார கூட்டமொன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.அவர் வீரசிங்கம் மண்டபத்தில் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்.

No comments