சிவாஜிக்கு காசு கோத்தாவிடமிருந்தாம்:சயந்தன்!


சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார செலவுகளை, கோத்தாவின் பிரச்சாரங்களை முன்னெடுத்துவரும்  முன்னாள் வடக்கு ஆளுநரே செலுத்திவருவதாக வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும்,தமிழரசு பிரமுகருமான சயந்தன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.

எனினும் அவ்வாறான கருத்துக்களை சுய அறிவிலா அல்லது மது போதையிலா தெரிவித்தார் என சிவாஜிலிங்கம் தரப்பு நையாண்டி செய்துள்ளது.

இதனிடையே  ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கம் ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு ஜோசெப் ஆண்டகையிடம் ஆசி பெற்றுள்ளார்.அவருடன் ஆனந்தி உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.

No comments