தேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா?


விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட பயணித்த கல்வி அதிகாரி நேரு மாஸ்டர் மற்றும் சாரதியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் உள்ளடங்கியிருந்தனர்.

அவர்களது விடுதலை தொடர்பில் விடுதலைப்புலிகள் தலைமை நேரடியாக அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேச முடிவு செய்தது.

வன்னியில் தேசிய தலைவர்,பொட்டு அம்மான் சகிதம் ஒரு தமிழ் ஊடகவியலாளரும் கொழும்பில் சந்திரிகா மற்றும் கூடவே சிங்கள ஊடகவியலாளர் ஒருவரும் பேச்சில் இருந்தனர்.

ஊடகவியலாளர்கள் பரஸ்பரம் பேசி தலைமைகளிற்கு செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

கடைசி வரை நியூட்டன் கடத்தப்பட்டமை தொடர்பில் தனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லையென சந்திரிகா வாதிட்டிருந்தார். அதுவே பின்னர் உண்மையாகவுமிருந்தது.

ஏனெனில் அவருடன் நட்பு கொண்டிருந்த தராகி சிவராம் கொலையை கூட தடுத்து நிறுத்த சந்திரிகாவால் முடியாதே போயிருந்தது.

அவ்வேளையில் சந்திரிகா தலைமையிடம் மன்றாட்டமாக நியூட்டன் கடத்தலுடன் தான் எந்தவகையிலும் தொடர்பற்றிருப்பதாக தெரிவித்ததுடன் கிடைத்த சந்தரப்பத்தில் உறுதி மொழியொன்றை பெற்றுக்கொள்ள முற்பட்டார்.

அது தனக்கும் தனது பிள்ளைகள் இருவரதும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை தருமாறான கோரிக்கையாக இருந்தது.

ஏற்கனவே கொழும்பில் தற்கொலை தாக்குதல் ஒன்றின் பின்னராக உயிர் தப்பியிருந்த சந்திரிகா அதனை சொல்லியே மீள கதிரையேறியிருந்தார்.

இப்போது உறுதி மொழி கேட்ட அந்த கணம் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து வீடு செல்கின்ற கணமாக இருந்தது.

என்றுமே குடும்பங்கள் தங்கள் இலக்கல்ல என தேசிய தலைமை உறுதிபட அப்போது தெரிவித்திருந்தது. எதிர்பார்த்தது போன்றே அப்போதே உறுதி மொழியும் வழங்கப்பட்டிருந்தது. சந்திரிகா மறுமுனையில் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

இறுதி வரை வழங்கிய உறுதி மொழியை தலைமை காத்திருந்தது.

சந்திரிகாவின் பிற்காலம் குடும்பத்துடன் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்திருந்தது.

அதற்கான கௌரவாமாகவே யாழில் தேசியத்தலைவரை தனது நன்றியின் ஊடே அடிக்கொரு தரம் சேர் என சந்திரிகா அழைத்துக்கொண்டார்.

அதற்கான முழு ஆளுமையுமுள்ள ஒருவராக தேசியத்தலைவரை சந்திரிகா சொன்னார்.

No comments