சர்ச்சைக்குரிய நியமனம்:இராகவன் மீது குற்றச்சாட்டு!


குற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு உள்ளானவரும் கோத்தபாயவின் நெருங்கிய நட்பை கொண்டவருமான நபரொருவருக்கு வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் புதிய தலைவர் பதவியை வடக்கு மாகாண ஆளுநர் தேர்தல் காலத்தில் வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாண பயணிகள் போக்கு வரத்து அதிகாரசபையில் இதுவரை செயல்பட்ட தலைவர் செ.மகாலிங்கம் நீக்கப்பட்டு குறித்த பதவிக்காகவே தற்போது தனது பிரத்தியேக செயலாளரை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் நிலையில் எவர் ஜனாதிபதியாக தேர்வானாலும் கண்டிப்பாக ஆளுநர் மாற்றப்படுவார் என்ற அரசியல் நிலைமையே காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக ஆளுநர் மாற்றப்பட்டாள் புதிய ஆளுநர் தனக்கான ஆளணியில் குறித்த தனிப்பட்ட பணியாளர்களை நியமிப்பதும் கேள்விக்குரியாகும் என்பதனால் குறித்த நியமனம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக திரைப்பட தயாரிப்புக்களில் ஈடுபட்ட போது சர்ச்சைக்குரியவகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

No comments