இனியபாரதியை விடுவிக்க உத்தரவிட்ட கோத்தா?


மன்னாரில் 164 கிலோ கஞ்சாவுடன் கைதாகியுள்ள மகிந்த ராஜபக்சவின் இணைப்பாளரும் பிள்ளையான் மற்றும் கருணா குழு உறுப்பினருமான அம்பாறையை சேர்ந்த இனியபாரதியை விடுவிக்க கோத்தா தலையீடுகளை மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

மன்னாரில் அதிகாலை வேளை உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இனியபாரதியென இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் அமைந்துள்ள கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கடத்தலில் ஈடுபட்டவர் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர்களை ஆட்கடத்தல் மற்றும் பல கொலைகளை மகிந்த மற்றும் கோட்டாவிற்காக செய்து கௌரவிக்கப்பட்டவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமார் என அம்பலமாகியிருந்தது.

இந்நிலையில் அவரை விடுவிக்க கடற்படையினருக்கு கோத்தபாய அழுத்தங்களை பிரயோகித்தமை அம்பலமாகியுள்ளது.

எனினும் சம்பவம் வெளியே அம்பலமானதையடுத்து கடற்படையினர் அதற்கு மறுத்திருந்ததாக தெற்கு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளது.

No comments