கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் ஐதேகவின் புள்ளி

வசந்த சேனநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அண்மையில், எதிர்கால அரசில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உண்மையா என்றும் ரவி கருணாநாயக்க, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பதவிகள் குறித்தும் திருப்தியற்ற பதில் கிடைத்தால் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மாட்டேன் என்று வசந்த சேனநாயக்கவினால் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்று அனுப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கையை கட்சி மேற்கொண்டுள்ளது.

No comments