காஷ்மீரில் தொடர் தாக்குதலால் பதற்றம்; 5 பொதுமக்கள் பலி!

ஜம்மு காஷ்மீரின் குலகம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளனர். அனால் அவர்கள் அனைவரும் காஷ்மீரி அல்லாதவர்கள் என்று காவல்துறை செய்தி தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் பாரவூர்தி ஓட்டுனர் ஒருவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதோடு, சோலூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் மக்களை குறிவைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 "தெற்கு காஷ்மீரின் பிரதிப் காவல்துறை அதிபர் தலைமையில் தீவிரவாதிகளை  தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர்,"தொடர்ந்து அப்பகுதிகளில் தீவரவாதிகள் தாக்குதல்நடைபெறுவதால் பதற்றமான சூழல் நிலவுவதாக் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments