வவுனியாவில் மூவர் படுகாயம்;

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றிரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த மோதல் சம்பவத்தின் போது அருகில் இருந்த சில வீடுகளின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments