ராஜபக்ஷவினர் இன்றும் ராஜபக்ஷவினர்களாகவே?


கோரிக்கைகளுக்காக பேரணியில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ராஜபக்ஷவினர் இன்றும் ராஜபக்ஷவினர்களாகவே உள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சோறா அல்லது துப்பாக்கி ரவைகளா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“ராஜபக்ஷவினர் இன்னும் ராஜபக்ஷர்கள் தான், அவர்கள மெதமுலனவை அபிவிருத்தி செய்தனர். அன்று சூரியவெவயில் கிரிக்கெட்  மைதானத்தையும் ஹம்பாந்தோட்டைக்கு பாரிய தொழிற்சாலையும் கொடுத்தனர். அந்த பணத்தை இங்கு முதலீட்டிருந்தால் இப்பகுதி பாரியளவில் அபிவிருத்தியடைந்திருக்கும். அதனை  அவர்களால் செய்ய முடியவில்லை.
“நான் ஒன்றை கேட்கின்றேன். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க முடியவில்லை. மானியமும் வழங்க முடியவில்லை. இறுதியில், எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரி சிலாபத்தில் பேரணியாக சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
“சம்பள அதிகரிப்பு கோரி கட்டுநாயக்கவில் போராடிய பேரணியில் ரொசான் ஷானக மற்றும் குடிநீர் கேட்டு போராடிய ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
“ இந்த நிலையை மாற்றி 2015ஆம் ஆண்டு நாங்கள் மக்களுக்கு உணவளிக்க ஆரம்பித்தோம். அதனை எதிர்காலத்திலும் தொடரவேண்டும். நீங்கள் சோறு சாப்பிடுவதா அல்லது ரவைகளை தாங்குவதா என்பது தொடர்பில் நவம்பர் 16ஆம் திகதி நீங்களே தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

No comments