மீண்டும் இரவிரவாக ஈழம் பிக்பொஸ்!


யாழ் மற்றும் கிழக்குப் பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாகப் பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் நிலைப்பாடு தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை(30) மாலை-04 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள விடுதியொன்றில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த கலந்துரையாடலில் ஐந்துதமிழ்க் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்மக்கள் கூட்டணி சார்பில் கொள்கை பரப்புரை செயலாளர் க.அருந்தவபாலன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழரசு கட்சியின் செயலாளர் தி. துரைராஜசிங்கம், வடமாகாணசபை அவைத் தலைவரும், தமிழரசு கட்சி உறுப்பினருமான சீ. வீ.கே. சிவஞானம், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் பொதுச் செயலர் ஸ்ரீகாந்தா, ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments