சஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா?


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்க்கட்சிகள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்குப் போதிய நியாயங்களிருப்பதாகக் கருதினால் அந்த நியாயத்தினைத் தமிழ்மக்களுடைய பெரும்பாலான அமைப்புக்களும், புத்திஜீவிகளும் மதத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (20) நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சஜித்பிரேமதாசவை ஆதரிக்க வேண்டிய தேவை பல்வேறு தமிழ்க்கட்சிகளுக்கு காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல்களின் போது சம்பந்தன் ஆசீர்வாதம் பெறும் காளியம்மன் ஆலய இந்துமதகுருவிடமும் அவர் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

No comments