சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு

எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சட்டத்தரணி பதவியில் இருக்க தகுதியற்றவர் என சத்திய கவேஷகயோ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (17) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சத்திய கவேஷகயோ என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்கு இணங்குவதில்லை என தெரிவித்த காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் சட்டத்தரணி பதவியில் இருக்க தகுதியற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments