கோத்தாவுக்கு ஆதரவை வழங்கினார் விஜயதாச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விஜயதாஸ ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments