சிங்களக் கொடிக்குள் சுருண்டுபோன புலிவேச இயக்குனர்கள்!

தமிழக திரையுலக பிரபலங்களான இயக்குனர் பாரதிராஜா  மற்றும் இயக்குனர் அமீர் ஸ்ரீலங்கா சென்று ஸ்ரீலங்கா அரசின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்துள்ளனர்.

 வடமாகாண ஆளுநர் செயலகமும் சிங்கள அரசின் கீழ் இயங்கும் வசந்தம் ஊடக குழுமம் நடத்தும் பாடல் போட்டியை தொடக்கி வைக்க இருக்கிறார்கள்.
இதன் முதற்கட்டமாக வடமாகாண ஆளுனரை சந்தித்து கலந்துரையாடி பரிசு பொருட்களும், புத்தர் சிலைகளும் பெற்றுள்ளனர்.

வாய்ப்புக்கள் அற்று சரியான வருமானம் அற்றுத் தவிக்கும் பிரபலங்கள் வரிசையில் இவர்களையும் குறிப்பிடலாம்.
தங்கள் திரைப்படங்களை வெளியிடவும் வருமானம் ஈட்டவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கவர்ந்துகொள்ள ஈழ விடுதலைக்கும் தேசியத் தலைவரையும் தமக்குரியவர் போலவும் தங்களை ஒரு தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்ட இவர்கள் தமிழகத்தில் தமிழ் தேசிய போராளிகளாகவும் , அதையும் மிஞ்சி தமிழக அரசியலில் இருக்கும்  சீமான், கவுதமன் போன்றவர்கள் பாரதிராஜாவை இனமான இயக்குனர் என்றும் தந்தை என்றும் அழைத்தும் தமிழர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், ஸ்ரீலங்கா சென்று சிங்கள அரச ஆளுனருடன் கைலாகு கொடுத்து கலந்துறவாடுகிறார்கள்.

வசந்தம் தொலைகாட்சி, வானொலி என்பவை, நேரடியாக சிங்கள அரசின் கீழ் இயங்கும் ஒரு ஊடக வலையமைப்பு, ITN எனும் இதன் தலைமை உடக அமைப்பு 2009 இறுதிகட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராகவும் விடுதலைபுலிகளை அளிப்பதற்கும் சிங்கள மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. வசந்தம் எனும் தமிழ் பிரிவு 2009 முள்ளிவைக்கால் தமிழனப் படுகொலைக்கு பின், தமிழர்கள் மத்தியில் இனவுணர்வையும் , போராட்ட சிந்தனையையும் மழுங்கடிக்கும் வண்ணம் மஹிந்த ராஜபக்சவால் கொண்டு வரப்பட்ட வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தில் அமைந்ததாகும்,
இன்று மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசி வடக்கின் ஆளுநராக வலம்வரும் சுரேன் ராகவன் மூலம் சிங்களத்தின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஈழத்துக்கு வருகை தந்துள்ளனர் புலிவேச இயக்குனர்கள்.
No comments