யாழில் மர்நபர்களின் கொடூரத் தாக்குதலில் இருவர் காயம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (04) இரவு 9.50 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த மூவரை இடைமறித்து மறைந்திருந்த இனம்தெரியாத நபர்கள் துரத்தித் துரத்தித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இரும்புக் கம்பி மற்றும் கத்தியாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் சாவச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றுமொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments