தமிழர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த கோரினார் சிவாஜி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த சிவாஜிலிங்கம்,

தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் தமிழர்களை புறக்கணிப்பது பௌத்த பேரினவாதிகளுக்கு வாடிக்கையாகும்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைக்கான தீர்வை பகிரங்கமாக எவரேனும் அறிவித்தால் அதனை பரிசீலிக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் தமிழ் மக்கள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை களமிறக்க தயாராக வேண்டும்.

தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் - என்றார்.

No comments