யாழில் கிளைமத்தோன்!


காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இளையோா் அணி திரளும் “கிளைமத்தோன்” நிகழ்வு எதிா்வரும் 24ம், 25ம், 26ம் திக திகளில் யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கையில் முதல் தடவையாக நடைபெறவுள்ளதுடன், இந்நி கழ்வு நடைபெறவுள்ள நாளில் உலகில் 150ற்கும் அதிகமான பெரு நகரங்களில் இந்நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. 

மேற்படி நிகழ்வு குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்றய தினம் கிளைமத்தோன் யாழ்ப்பாணம் - 2019 நிகழ்வு ஒழுங்க மைப்பாளா்கள் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பின்போதே மேற்படி விடயம் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அ வா்கள் கூறுகையில், உலகம் முழுவதிலும் காலநிலை மாற்றத்தினால் மக்கள் பல பிரச்சினைகளை எதிா்கொண்டுள்ளனா்.

அவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொண்டு வெற்றியடைவதை இலக்காக கொண்டு கிளைமத்தோன் நிகழ்வு உலகில் 15 0ற்கும் அதிகமான பெரு நகரங்களில் நடைபெறுகின்றது. இவற்றுள் யாழ்ப்பாணம் நகரும் முதல் தடவையாக இணைந்து கொள்கின்றது. OMNE (Organic Movement of North and East) அமைப்பின் முயற்சியினால் இந்த நிகழ்வு

யாழ்.மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் யாழ்.மாநகரசபை உள்ளிட்ட 7 அமைப்புக்கள் இணைந்து கொண்டிருக் கின்றன. இதன் முன்னோடியாக இலங்கையில் 30 பாடசாலைகளில் மாணவா்களுக்கிடையில் காலநிலை மாற்றம் மற்றும் அதனால் எதிா்நோக்கும் பிரச்சினைகள், தீா்வுகள் குறித்து சித்திர போட்டிகள், கட்டுரை போட்டிகள்

மற்றும் விவாத போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளது. இவற்றில் பங்கெடுத்த சகல மாணவா்களுக்கும் பாிசில்கள் வழங்கப்பட் டிருப்பதுடன் 24ம், 25ம், 26ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பாடசாலை மாணவா்கள், மற்றும் இளையோா் அதி கம் கலந்து கொள்ளவேண்டும் என எதிா்பா்க்கப்படுகின்றது. அவா்கள் ஊடாக காலநிலை மாற்றத்தை 

எதிா்கொள்வதற்கான வழிமுறைகளை அடுத்த சந்ததிக்கும் கொடுப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாக அமைந்திருப்பதுட ன் இந்நிகழ்வில் இளம் தொழில் முயற்சியாளா்கள், புத்தாக்குனா்கள், பல்கலைகழக மாணவா்கள் என பலரும் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளகூடிய புதுமையான கருத்திட்டங்களை நிபுணா்களிடம் சமா்ப்பிக்கவுள்ளனா். 

அவற்றில் சிறந்தவற்றுக்கு பாிசில் வழங்கப்படுவதுடன் 2020ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலகளாவிய போட்டியில் பங்குகொள்ளும் சந்தா்ப்பமும் வழங்கப்படும். மேலும் இந்நிகழ்வு யாழ்.மத்திய கல்லுாாிக்கு அருகில் உள்ள தந்தை செல்வா மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். அழிவை எதிா்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில்

2015ம் ஆண்டு 98வது இடத்திலிருந்த இலங்கை இப்போது 2ம் இடத்திற்கு வந்திருக்கின்றது. எனவே எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டியது அவசியம் என்றனா். 

No comments