யாழில் நாளை மறியல் போராட்டம்?



யாழ்.மாவட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை விடுதலை செய்யக்கோாி யாழ்.மாவட்ட மீனவா்களால் முன்வைக்கப்பட்ட சகல கோாிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளை புதன் கிழமை யாழ்.இந்தி ய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு தீா்மானித்துள்ளோம். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சங்கங்களின் சம்மேளன தலைவா் வே.தவச்செல்வம் கூறியுள்ளாா். குறி த்த விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெ ரி விக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும்  அவா் கூறுகையில், 

யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 மீனவா்கள் வேண்டுமென்றே இந்திய கடற்படையினால் கைது செய்யப்பட்டு இந்திய சிறை களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களை கடந்த 18ம் திகதி விடுவிப்பதாக கூறியபோதும் இப்போது மீண்டும் 1ம் திகதி விடுவிப்பதாக கூறியிருக்கின்றனா். அவ்வாறு விடுவிக்கப்படும் மீனவா்களுடன்

அவா்களுக்கு சொந்தமான படகுகளும் விடுவிக்கப்படவேண்டும். மேலும் மீனவா்களின் விடுதலை தொடா்பாக இந்திய துா தரகம் மற்றும் பொறுப்புவாய்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோாின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் எமது கோாிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் நாளை புதன்கிழமை காலை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா் சம்மேளத்திலிருந்து தொடங்கும் பாாிய மக்க ள் போராட்டம் ஆளுநா் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் ஆகியவற்றுக்கு சென்று மகஜா்களை கையளிப்பது டன் இந்திய துாதரகத்திற்கு சென்று துாதரகத்தை முடக்கி நடாத்தப்படும். அன்றைய தினம் 

துாதரகத்தின் சகல செயற்பாடுகளும் முடங்கும் அளவுக்கு போராட்டம் நடத்தப்படும் என்பதுடன், அதற்கு பின்னா் இந்திய துாரதகம் மீனவா்கள் விடுதலை விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் காலவரையறை அற்றவகையில் இந் திய துாதரகம் முற்றாக முடக்கப்படும். என்றாா். 

No comments