சகிப் அல் ஹசனுக்கு அதிகபட்ச தண்டனை


சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) ஊழல் தடுப்பு சட்டத்தின் மூன்று விதிகளை மீறியதை ஏற்றுக் கொண்டதை அடுத்து பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசனுக்கு அனைத்து வகை கிரிகெட்டிலும் இருந்து இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, சிம்பாப்வே அணிகளுடன் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் போது பெற்றுக் கொண்ட சூதாட்ட அணுகுமுறை தொடர்பில் இரண்டு முறை ஐசிசிக்கு தெரியப்படுத்தாமை, 2017,8ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளின் போது பெறப்பட்ட அணுகுமுறை தொடர்பிலும் தெரியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றத்திற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி மீறல்களை சகிப் அல் ஹசன் ஒப்புக்கொண்ட பின்னரே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு ஆண்டுத் தடையை அவர் ஓர் ஆண்டுக்கு தண்டனையாக அனுபவிக்கும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments