எழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை

ராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள வேளையில் அந்த பேச்சு மீதான விமர்சனங்களும் குறைந்தபாடில்லை.  பல்வேறு ஈழ ஆதரவாளர்களும் , அமைப்பு கட்சிகளும் சீமானை கடுமையாக சாடியுள்ளனர், இவரின் கருத்து 7பேரின் விடுதலைக்கும் இது தடையாக அமையும் என்று கூறிவருகின்ற வேளையில்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாச்சப்பட்டு சிறையில் வாடும் எழுவரில் சாந்தனின் தம்பியும்,  ஈழத்தின் பிரபல குறும்பட , திரைப்பட இயக்குனரான மதிசுதா, சீமானின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்,

 இதுகுறித்து மதிசுதா குறிப்பிட்டுள்ளதாவத.

"இந்த மண்ணில் பிறந்த அம்மாக்கள் எல்லாரும் எங்களை பிள்ளைகளாகப் பெற்றதைத் தவிர வேறெந்தத் தவறையும் செய்து விடவில்லை.

விடுதலை விளிம்பில் நிற்கும் ராஜீவ் கொலைக்குற்றம்சாட்டப்பட்டவரின் நிலையை துளியளவும் கணக்கில் எடுக்காத சீமான் தனது அரசியல் வியாபாரத்துக்காக உளறி விட்டுப் போய்விட்டார் என்பதை விட தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியின் வாக்குப் பெறுமதியைக் குறைப்பதற்காக ஒரு கட்சியின் அறிவுறுத்தலுக்கமைய உளறி விட்டு அமைதியாகிவிட்டார்.

ஆளும் கட்சியின் மதிப்பை குறைக்கும் நோக்கில் எதிர் ஊடகங்கள் ”ஆளுணர் பன்வாரிலால் கருணை மனுவை நிராகரித்து விட்டார்” என்ற செய்திகளைப் பரப்பி விட்டார்கள்.

ஆனால் இந்த 28 வருடங்களும் மரணதண்டனை என்பது அந்த 7 பேருக்கானதல்ல அந்த 7 பேரது குடும்பத்துக்குமானது என்பதை யாரும் உணரும் நிலையில் இல்லை.

இருந்த வேலைகள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு அம்மாவுக்கருகில் வந்திருக்கிறேன். பாவம் அடிக்கொருதரும் வந்து கேட்கிறார் ”கடவுள் செய்திகள் ஏதாவது சொன்னாதா” என.

குறிப்பு - காலை கனடாவில் இருந்து இரு நண்பர்கள் போன் செய்தார்கள் (ஒன்றாக நிண்டபடி). ”நாங்கள் மன்னிப்புக் கேட்டதாக உங்கள் அம்மாவிடமும் சொல்லுங்கள்” ”ஏன்” என்றேன்.
”இதே சீமானுக்குத் தான் தேர்தல் காலத்தில் ஆளுக்கு 100 $ படி சேகரித்து அனுப்பினோம்.” என குரிப்பிட்டுள்ளார்.

No comments