அமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்!

வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது  காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்கர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

"வேண்டாம் அமெரிக்கா" மற்றும் "அமெரிக்கா பொய்யர்" என்று முழங்கியவாறு கவச வாகனங்கள் வாகனங்களையும் இருமருங்கிலும் வழிமறித்து உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளால் எறிந்தனர்.

அக்டோபர் தொடக்கத்தில் சிரியாவில் எல்லைப் பிராந்தியங்களில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவால் குர்துகள் நிர்கதியாகியிருன்தனர்.

துருக்கி தன்னுடைய இராணுவத் தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டுள்ள நிலையில், குர்திஷ் கட்டுப்பாட்டில்இருந்து  100 க்கும் மேற்பட்ட அமெரிக்க கவச வாகனங்களும், கிட்டத்தட்ட 1,000 பேர் சிரியாவிலுள்ள டோக் மாகாணத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்து, ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்திற்கு செல்லும்போதே இவ்வாறு நடந்தது.


No comments