சஜித்துக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சி மத்தியசெயற்குழு எடுத்த முடிவுக்கு, கட்சியின் சம்மேளனம் இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவருகின்றது.

இதன்போதே சஜித்தின் பெயரை முன்மொழிந்து, அனுமதியை கோரினார் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அதிகாரப் பகிர்வு.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு.
தேர்தல் முறைமையில் மாற்றம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தல்.
உட்பட ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து - செயற்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments