பிரபாகரனை சந்தித்தது ஏன்?; ஷஹ்ரான் கைகுலுக்கல் எதற்கு: ஹக்கீமின் பதிலடி


வெளியாகியுள்ள ஒரு படத்தில் நான் ஷஹ்ரானுடன் கைகுலுக்குகிறேன். நாங்கள் பொது மக்களை சந்திக்கும் போது அவர்களை பற்றி தெரியாமல் மகிழ்ச்சிக்காக கைகுலுக்குவோம். அதுவே நடந்தது. அப்போது ஷஹ்ரான் பயங்கரவாதி என்பது தெரியாது.

ஹிரு டீவியில் நேற்று காட்டிய வீடியோவில் அருகில் இருப்பவரை நீக்கியுள்ளனர். அந்த நபர் சியாத். அவர் பெரமுனவின் காத்தான்குடி அமைப்பாளர்.

என் மீது சேறு பூசும் மிப்லான் இப்ரஹிம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவர். அவர் பெரமுனவின் நெருக்கமான உறுப்பினர். அதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

நான் பிரபாகரனை சந்தித்தேன் என்று ஜிஎல்.பீரிஷ் கூறினார். அரசியல் ரீதியாகவே அது நடந்தது. அது அவருக்கும் தெரியும் பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக அவரே இருந்தார். நான் அதில் ஒரு உறுப்பினராக இருந்தேன்.

 - ரவூப் ஹக்கீம்
(பதில், நாடாளுமன்றம்)

No comments