குண்டுத் தாக்குதலை ஆதரித்த மௌலவி விடுதலை

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றநிலையில் அதனை ஆதரித்து சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை பேஸ்புக் மூலமாக வெள்ளியிட்டிருந்த மௌலவி எம்.கே. முனாஜித்திற்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த குறித்த மௌலவி ஈஸ்டர் தினத் தாக்குதல் நடைபெற்ற நாளில் மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்தநிலையில், அங்கிருந்தவாறே பேஸ்புக் மூலமாக குறித்த காணொளியை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் திகதி அவர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜந்து மாதங்களிற்கு பின்னர் வவுனியா மேல் நீதிமன்றால் அவருக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளிற்கு பின்னர் நேற்று(புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments